புத்தக பார்வை

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் – பாகம் 9

சென்னை, செப். 8- ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் – பாகம் 9 நுாலினை எஸ்.சுவாமிநாதன் எழுதியுள்ளார். வசந்தா பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான, 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடை தரும் நுால். நோய்களுக்கு இயற்கை பொருள்களே மருந்தாக அமைவதை விளக்குகிறது.


அரிசி, கோதுமை, கீரை, காய், கனி, பால், தேன் போன்றவற்றை பயன்படுத்தி, எத்தகைய நோயையும் குணப்படுத்த முடியும் என்பதை இந்நுால் மூலம் அறியலாம்.
வாயு, பித்தம், கபத்தை அறிவியல் பார்வையில் விளக்குகிறது. துாக்கமின்மை, பசியின்மை, மூட்டு வலி, பிரசவ வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னைகளுக்கு தக்க விடையளிக்கிறது.
தவறாக மருந்து உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி எச்சரிக்கிறது. அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய உடல் ஒழுக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை தருகிறது இந்நுாலின் விலை 500 ரூபாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp