மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம்
சென்னை, செப். 8- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு இஞ்சி வெல்லம் என தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் விஜய்சேதுபதி, சாய்பல்லவி இணைந்து நடிக்கின்றனர். லைக்கா பட நிறுவனம் வெளியிடும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தக் லைப் படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மேற்குவங்கத்தில் துவங்கியுள்ளது. படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் படம், இனிப்பும் காரமும் கலந்த காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

