ஸ்ரீ மத் பாகவதம் சுவையான கருத்துகள்
சென்னை, செப். 8- ஸ்ரீ மத் பாகவதம் சுவையான கருத்துகள் பேராசிரியர் வி.கணபதி எழுதியுள்ள இப்புத்தகத்தை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீ மத் பாகவதம் எளிய இனிய தமிழில் மலர்ந்துள்ள நுால். பாகவதத்தை புரிந்து கொள்ள, சமஸ்கிருத மொழி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் இல்லை.
இந்த புத்தகத்தில் முக்கிய சமஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. கலியுகத்தில் விஷ்ணு ஸ்மரனையே, மோட்சத்தை அளிக்கும் என விவரிக்கிறது ஸ்ரீமத் பாகவதம்.

பக்தி தான், கலியுகத்தில் பிரதானம் பெறுகிறது என்பதை பரிபூரணமாக உணர்த்துகிறது. பிரதிபலனை எதிர்பார்க்காமல், ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் செலுத்துகின்ற சரணாகதி பக்தியே, முக்தி அளிக்கும் என்கிறது.
விஷ்ணுவின் அவதாரங்களை புரிய வைக்கிறது. கருமத்தின் பலனில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாது என உணர்த்தும் நுாலின் விலை ரூ.350.

