நாங்கள் கடந்து வந்த வலிகள் இப்படித்தான்
சென்னை, செப். 5 – கிட்ட தட்ட 25 ஆண்டுகள் முன் எங்கள் மக்கள் வாழ்ந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மிக மோசமாக உள்ளது சரி செய்யவேண்டும் என்று கொட்டும் மழையில் நனைந்தபடி குடிசைமாற்று வாரிய அதிகாரி அலுவலக வாசற்படியில் நின்று கோரிக்கை வைத்தோம.
அப்போது, இன்னுமா நீங்க அங்கு வசிக்கிறீர்கள் என்று கேட்ட அந்த அதிகாரியின் வார்த்தைகளின் வலி, மின்சார வாரியத்தில் புகார் சொல்ல செல்லும் போது, எங்களை பார்த்து உங்களுக்கு என்ன மின்சாரம் முக்கியமா என ஏளனம் பேசிய அதிகாரிகளின் வார்த்தைகளின் வலி, குடிநீர் கேட்க சென்றால் அதெல்லாம் வரும் போங்கள் என்று தண்ணீர் விற்போர்க்கு தண்ணீரை (1980களில்) குடம் 50 பைசா என்று வாங்கும் அவலம். 2 அடி முதல் இடுப்பளவு கழிவு நீரில் மழைகாலத்தில் செல்ல வேண்டும். இன்னும் பல பல வலிகள். வெளியில் சொல்ல முடியாத வலிகள். இந்த வலிகளுக்கு தீர்வு தேடி துவங்கிய நம் பயணம், 25 ஆண்டுகளாக தொடர்கிறது பல்வேறு விஷயங்களுைனும், போராட்டங்களுடனும் – இரா.பூபாலன், திருவொற்றியூர்.

