சென்னை

நுாதன முறையில் முதியவரை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுனர் கைது

சென்னை, செப். 6- முதியவரை நுாதன முறையில் ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 60. இவர் சென்னையில் தங்கியிருந்து கட்டட வேலை பார்த்து  வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் அஷ்டபுஜம் சாலை வழியே நடந்து சென்றார்.

அப்போது, ஆட்டோவில் வந்த நபர் ஒருவர், கிருஷ்ண மூர்த்தியிடம், ‛என் முதலாளி வீட்டில் சாப்பாடு போடுகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும் பணமும் தருவார்கள். அங்கு வரும் போது பை, பணம் இவற்றை எல்லாம் கையில் கொண்டு செல்லாமல், ஆட்டோவில் வைத்து விட்டு செல்ல வேண்டும்’ எனக்கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

(கற்பனை வரைபடம்)

கிருஷ்ணமூர்த்தியும், இதை நம்பி ஆட்டோவில் ஏறியுள்ளார். குறிப்பிட்ட ஒரு வீட்டின் முன், ஆட்டோவில் இருந்து கிருஷ்ணமூர்த்தியை இறக்கி விட்ட ஆட்டோ ஓட்டுனர், ‛இங்கேயே இருங்கள் முதலாளி கூப்பிடுவார்’ எனக்கூறி மொபைல்போனில் பேசுவது போல் நடித்தபடியே, கிருஷ்ணமூர்த்தி ஆட்டோவில் வைத்த முதியவரின் 2,000 ரூபாய் பணம், பை உள்ளிட்ட கட்டட உபகரணங்களுடன் ஆட்டோ ஓட்டுனர் மாயமானார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், திருவள்ளூர் மாவட்டம், காந்தி நகரை சேர்ந்த சுந்தர், 37 என்ற ஆட்டோ ஓட்டுனரை நேற்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை போலீசார் மீட்டு, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். சுந்தர் மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp