உணவே மருந்து

குடம் புளி பயன்கள்

சென்னை, செப். 7- குடம் புளி என்பது கார்சினியா கம்போஜியா என்ற தாவரவியல் பெயர் கொண்டது. இந்தோனேஷியா மற்றும் மத்திய கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியதாகும்.
இந்தியாவை பொருத்தவரையில் மகாராஷ்டிரா கோவா கேரளா போன்ற இடங்களில் பெருமளவில் விளைகிறது. பழங்காலம் தொட்டே தமிழ் மக்கள் பயன்படுத்திய புளி வகையாகும். இலங்கை வழக்கில் சீமை கொறுக்காய், மலபார் புளி, காம்போச், பழம்புளி என அழைக்கப்படுகிறது

இதன் நன்மைகள்:
உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.
உடல் எடை குறைப்புக்கு தயார் செய்யப்படும் சப்ளிமெண்டில் மிக முக்கிய பொருள் இந்த குடம்புளி ஆகும்.
ஏனென்றால் இதில் உள்ள எச்.சி.ஏ., என்ற அமிலம் அதாவது ஹைட்ராக்சி சிட்ரிக் ஆசிட் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பை எரிப்பதால் இது பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மேலும் இது குடல் இயக்கத்தை சீராக்கி அஜீரணம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
வயிற்றுப்புண் போன்றவற்றை தீர்க்கும் தன்மை கொண்டது.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து மாரடைப்பு மற்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது. அதாவது கெட்ட கொழுப்பு வகையை இது குறைக்கிறது.
மேலும் டைப் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உள்ளதால் குடல் தொற்றுகளை தடுக்கும்.
ஹோமியோபதி மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த குடம்புளி உடல் தசைகளை வலுவாகுகிறது.
உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கம் குணப்படுத்துகிறது.
இது மூட்டுகளில் ஏற்படும் வலியையும் வீக்கத்தையும் குறைக்கிறது…
ரசம், குழம்பு வகைகளில் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp