சினிமா

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் பிக்காசோ

சென்னை, செப். 8- கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார், அடுத்த தலைமுறை நட்சத்திரமுமான அபிஷன் ஜீவிந்த் இணையும், பிக்காசோ படத்தை அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார்.

டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான அபிஷன் ஜீவிந்த்தின் புதிய தலைமுறை நடிப்புத் திறன் இணையும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரின் இயல்பான, குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் மாறுபட்ட காட்சியமைப்பை உருவாக்குகின்றன.

மேலும், ‘பிக்காசோ’ என்ற தலைப்பு கையால் வரையப்பட்ட மஞ்சள் நிற எழுத்துக்களில் இடம்பெற்றிருப்பது பர்ஸ்ட் லுக்கிற்கு கலைநயமிக்க தோற்றத்தை வழங்குகிறது. படத்தின் கதையும் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான அணுகுமுறையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த பர்ஸ்ட் லுக் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி, இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp