சென்னை

துாங்கிக் கொண்டிருந்த பாட்டி வீட்டில் கைவரிசை காட்டிய சிறுவர்கள் கைது

சென்னை ஆக. 27-

சென்னை கொளத்தூர் ஜி கே எம் காலனி 43வது தெருவில் வசித்து வருபவர் அரவிந்த், 27 இவர் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் முதல் தளத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். கீழ்த்தனத்தில் இவரது பாட்டி திராவிட மணி, 84 என்ற நபர் வசித்து வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் பாட்டி சாப்பிட்டுவிட்டு உறங்கிவிட்டார் இன்று காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து உள்ளது.

அப்பொழுது பீரோவில் இருந்த பணத்தை பார்த்தபோது அதிலிருந்து 24 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது மேலும் பொருட்கள் சிதறி இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி திராவிட மணி தனது பேரன் அரவிந்துக்கு தகவல் தெரிவித்தார். அரவிந்த் முதல் தளத்திலிருந்து கீழ்த்தளத்திற்கு வந்து பார்த்து உடனடியாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு சிறுவர்கள் ஜன்னல் வழியாக பாட்டி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றது தெரிய வந்தது. இதனை யடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அதே வீட்டில் குடியிருக்கும் மற்றொரு சிறுவனிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த சிறுவனின் நண்பர்கள் இருவர் நேற்று சிறுவனை பார்க்க வந்ததும் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது பாட்டி வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதனை யடுத்து இன்று காலை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுவன் என இரண்டு சிறுவர்களையும் கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து திருடப்பட்ட 24 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டது. சிறுவர்கள் இருவரும் அதே வீட்டில் குடியிருக்கும் சிறுவனை அடிக்கடி பார்க்க வந்துள்ளனர். அப்பொழுது பாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நேற்று வீட்டிற்குள் சென்று பணத்தை திருடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை யடுத்து சிறுவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்த கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp